புவியின் வெப்பநிலையைக் குறைக்க வானில் நவீன சோதனை

  jerome   | Last Modified : 19 Dec, 2016 06:33 pm
பூமியைச் சுற்றியுள்ள வளி மண்டல அடுக்கில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கும் காரணத்தால், புவியின் வெப்பநிலையும் அதிகமாகின்றது. இதனால், ஓசோன் அடுக்கில் துளைகள் ஏற்பட்டு சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் நேரடியாக பாதிப்பதோடு மட்டுமின்றி பருவநிலை மாற்றங்களும் நிகழ்கின்றன. இதைத் தவிர்ப்பதற்கு, ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய முறையைக் கையாள உள்ளனர். இதற்கு முன்பு சல்பர் டை ஆக்சைடு மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது கண்டறிந்துள்ள nonreactive aerosols முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், இந்த aerosols தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close