இனி பக்கவாதம் வந்தாலும் நடக்கலாம்

  mayuran   | Last Modified : 21 Dec, 2016 10:06 pm

தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹுண்டாய் கார் நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை கொண்ட கார்களை வடிவமைத்து வருகிறது. இதன் அடுத்த புதிய திட்டமாக, பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடையும் விதத்தில் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளனர். எழுந்து நடக்க முடியாதவர்கள் இந்த கருவியை தங்கள் காலுடன் சேர்த்து பொருத்திக் கொண்டால், நடக்க உந்துதலாக இருக்கும். இது குறித்த வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கருவி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close