இரவில் ஒழுங்காகத் தூங்கவில்லை என்றாலோ, அல்லது மதியம் 2 'கப்' தயிர்சாதம் எக்ஸ்ட்ரா சாப்பிட்டாலோ பிற்பகலில் தூக்கம் தள்ளும் என்பதுதான் பொதுவாக நிலவிவரும் கருத்து. ஆனால், Stanford பல்கலைக்கழகத்தில் தூக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், "மனித உடலானது மதிய உறக்கத்தை விரும்பித் தேடுவது. மேலும், மதியம் ஒரு குட்டி தூக்கம் (nap) போட்டால் பார்க்கும் வேலையை மேலும் திறம்பட செய்ய முடியும்" என்கின்றனர். இதனை brain wave recordings, sleep diaries போன்ற பல்வேறு ஆய்வுமுறைகளைக் கொண்டு கண்டறிந்துள்ளனர்.