2017ல் சாதனை படைக்க காத்திருக்கும் இஸ்ரோ !

  gobinath   | Last Modified : 28 Dec, 2016 01:54 pm
ஒரே நேரத்தில் 83 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைக்க இஸ்ரோ தயாராகி வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், வரும் ஜனவரி இறுதியில் இந்த 83 செயற்கை கோள்களையும் விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும், பிஎஸ்எல்வி சி - 37 ராக்கெட் மூலம் இவை விண்ணுக்கு ஏவப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மொத்தமுள்ள 83ல் ,80 செயற்கைகோள்கள் இஸ்ரேல், கஜகஸ்தான்,நெதர்லாந்து மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமானவை என்றும், இவை ஒவ்வொன்றும் 500 கிலோகிராம் எடை உடையவை எனவும் கூறினார். அத்துடன் இந்தியா தயாரிப்பில் உருவாகியுள்ள "கார்ட்டோசேட் - 2" , 750 கிலோகிராம் எடையை கொண்டிருப்பதாகவும், மீதமுள்ள "ஐஎன்எஸ் 1ஏ" , "ஐஎன்எஸ் 1பி" ஆகிய செயற்கைகோள்கள் தலா 30 கிலோகிராம் எடையையும் கொண்டிருப்பதாகவும் கிரண்குமார் தன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close