ஓசோன் ஓட்டைக்கு கலப்பின மாடுகள் தான் காரணமாம்!!!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹிதேஷ் ஜானி எனும் ஆராய்ச்சியாளர் செய்த ஆய்வின் முடிவில் உலக வெப்பமயமாதலுக்கு மேற்கு நாடுகளை சேர்ந்த கலப்பின மாடான ஜெர்ஸி மாடுகள் தான் காரணம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கலப்பின மாடுகள் நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். இவை எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாக கூடியவை. மேலும் இம்மாடுகள் உடலில் இருந்து அதிக அளவு மீத்தேன் வாயுக்களை வெளியேற்றுவதால் அவை ஓசோனில் ஓட்டையை ஏற்படுத்தி உலக வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கின்றன, என கூறியுள்ளார். மேலும் கலப்பின மாடுகளில் இருந்து பெறப்படும் A1 ரக பாலானது மனிதனின் உள்ளுறுப்புகள், செரிமான மண்டலம் மற்றும் மூளை ஆகியவற்றை பாதிப்பதோடு சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, ஆட்டிஸம் போன்ற குறைபாடுகளை உருவாக்குவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய நாட்டு மாடுகள் எந்த வித தீங்கையும் ஏற்படுத்தாதவை என்றும், அவற்றில் இருந்து பெறப்படும் A2 ரக பாலானது மனிதனின் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close