புற்றுநோய் செல்களை அழிக்கும் நீரிழிவு மாத்திரை

  gobinath   | Last Modified : 28 Dec, 2016 01:56 pm
நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் புற்றுநோய் செல்களை அழிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக சுவிட்சர்லாந்து பாசெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டான் பெஞ்சமின் என்பவர் நடத்திய ஆய்வில், 2 ஆம் ரக நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மெட்ஃபோர்மின் என்ற மாத்திரையும், உயர் இரத்த அழுத்த நோய்க்காக பயன்படுத்தப்படும் சைரோசிங்கோபைன் என்ற மாத்திரையும் கூட்டாக சேர்ந்து புற்றுநோய் செல்களை அழிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close