ஒரு நொடி தாமதமாக பிறக்கும் 2017 !

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2017-ஆம் ஆண்டானது வானியல் கடிகாரத்தின்படி ஒரு நொடி காலதாமதமாக பிறக்கும் என கால அளவியலாளர்கள் கணித்துள்ளனர் . வானியல் நேரமானது, நாள் ஒன்றிற்கான பூமியின் சுழற்சியை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதிலும் 400 இடங்களில் உள்ள அணு கடிகாரம் மூலம் துல்லியமாக நேரம் கணக்கிடப்படுகிறது. நிலவின் ஈர்ப்புவிசை, புவிநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி சுழற்சி தாமதமாகி இருக்கலாம் எனவும், இதன் காரணமாக 500 முதல் 750 நாட்கள் வரை வானியல் நேரத்துக்கும் அணு கடிகார நேரத்துக்கும் இடையில் ஒரு விநாடி வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச பூமி சுழற்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், உலக கடிகாரத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11 மணி 59- வது நிமிடம், 59 ஆவது நொடிக்கு பிறகு ஒரு நொடி செயற்கையாக சேர்க்கப்படவுள்ளது. இவ்வாறு சேர்க்கப்படும் செயற்கை நொடியானது "லீப் விநாடி" என அழைக்கப்படுகிறது. இந்த லீப் விநாடி முறையானது 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், உலகில் இதுவரை 26 முறை லீப் விநாடி சேர்க்கப்பட்டுள்ளது . அதுபோல், 27-வது முறையாக இந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதியும் லீப் விநாடி சேர்க்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close