புவி வெப்பமடைவதால் பெரிதாகும் பறவையின் இறக்கைகள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சிட்னியில் உள்ள Notre Dame பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாவின் மோதிரக் கழுத்துப் பறவை (Barnardius zonarius)-யின் இறக்கைகள் சமீபகாலமாகப் பெரிதாகி வருவதைக் கவனித்தனர். பின்னர் இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுகையில், இப்பறவைகளின் இறக்கை கடந்த 45 ஆண்டுகளில் 4 முதல் 5 cm நீளம் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. "புவி வெப்பமடைவதால் (Global Warming) இவ்வாறான நீண்ட இறக்கைகளைத் தகவமைத்துக் கொள்வதன்மூலம், இப்பறவைகளால் உடல் வெப்பத்தை எளிதில் வெளியேற்றவும், புதிய சுற்றுச்சூழலுடன் ஒத்திசைந்து வாழவும் முடிகிறது" என ஆராய்ச்சியாளர் Dylan Korczynskyj தெரிவித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.