அக்டோபர் மாதம் பூமி அழிய போகுதாம்...?!

  நந்தினி   | Last Modified : 04 Jan, 2017 07:40 pm
2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் அழியப் போவதாக ஒரு விஞ்ஞான எழுத்தாளர் தனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்து எழுத்தாளரான David Meade, தான் எழுதியிருக்கும் "Planet X – The 2017 Arrival" என்ற புத்தகத்தில், சூரியனைப் போன்றதொரு கோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றும், Nibiru என்ற அந்த கோளானது வருகிற அக்டோபர் மாதம் பூமியின் மீது மோதி உலகத்தை அழிக்கும் என்று எழுதியிருக்கிறார். தீக்கோளான நிபிரு கோள் சூரியக் குடும்பத்தின் விளிம்பில் உள்ளது எனவும், அப்படி ஒரு கோள் இல்லவே இல்லை என்றும் இருதரப்பு விஞ்ஞானிகள் வாய்க்கா தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பூமியை விட பலமடங்கு பெரிய கோளான நிபிரு பல ஆண்டுகளாக பூமியை நோக்கி பயணிக்கிறது என்கிறார் டேவிட் மேட். வருகிற அக்டோபர் மாதம் பூமியின் மீது அது மோதும் என்று அடித்து சொல்கிறார். டேவிட்டின் இந்த கணிப்பை மறுத்துள்ள நாசா, நிபிரு கோள் வெறும் கற்பனை என்று தெரிவிக்கிறார்கள். இதேபோல், கடந்த 2015 மற்றும் 2012 ஆம் ஆண்டிலும் இந்த நிபிரு கோள் கணிக்கப்பட்டு, "உலகை அழிக்க அது வருகிறது" என்ற பயமுறுத்தும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒரு புத்தகத்தை விக்கிறதுக்கு எவ்ளோ குழப்பம் பண்றாய்ங்க!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close