விண்வெளியில் உள்ள கருந்துளை ஆராய்ச்சியில் நாசா

  gobinath   | Last Modified : 05 Jan, 2017 08:56 am
வரும் 2020 இல் இருந்து விண்வெளியில் உள்ள கருந்துளைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாக நாசா அறிவித்துள்ளது. பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப் படவுள்ள மேற்படி திட்டத்துக்கு, 3 ராட்சத விண்வெளி தொலைநோக்கிகள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நாசா, விண்வெளியில் உள்ள பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகள், கண்களுக்குப் புலப்படாத விண்வெளி பொருட்கள் பற்றி துல்லிய புகைப்படங்கள் எடுத்தும் நேரடியாகப் பார்வையிட்டும் ஆய்வு நடத்தப்படவுள்ளது எனக் கூறியுள்ளது . மேலும், சர்வதேச விண்வெளி மையம் அல்லது பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையம் போன்றவற்றில் இருந்து விண்வெளி வீரர்கள் இந்த பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close