சில சப்தங்கள் உடலைக் கூச்சரிய வைப்பது ஏன்?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சில சமயங்களில் கண்ணாடிப் பொருட்கள் மற்றும் எழுது பலகைகளில் உருவாகும் "க்ரீச்" எனும் ஒருவித ஒவ்வாத சப்தம் நம் உடலைக் கூச்சரிய வைக்கும். அது எவ்வாறு நிகழ்கிறது என தெரிந்துகொள்வதற்கு நடத்தப்பட்ட ஆய்வில் அரிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. நம் மூளையின் ஒலியை உணரும் பகுதிகளான auditory cortex மற்றும் amygdala - வில் ஒவ்வாத ஒலிகளை கேட்கும்போது எதிர்மறையான அழுத்தம் உணரப்படுகின்றது. இதன் அளவு 2000-5000 Hertz அலைவரிசையை கொண்டதாகவும் இருக்கின்றது. functional magnetic resonance imaging (FMRI) என்ற முறையைப் பயன்படுத்தி இதை கண்டறிந்துள்ளனர். சிம்பான்சி குரங்குகள், ஆபத்துக் காலங்களில் இவ்விதமான ஒலியை உண்டாக்கி மற்ற குரங்குகளை எச்சரிக்கை செய்கின்றன எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close