மீட்பு பணிக்கு தயாராகும் ராணுவ டால்பின்கள்

  jerome   | Last Modified : 06 Jan, 2017 05:22 pm

அழிந்து வரும் கடல் உயிரினமான "vaquitas" எனும் டால்பின் வகை மீன்களை காப்பாற்ற, அமெரிக்க கப்பற்படையால் பயிற்சி பெற்ற ராணுவ டால்பின்கள் அனுப்பப்பட உள்ளன. கலிஃபோர்னியா வளைகுடா பகுதிகளில் காணப்படும் "vaquitas" டால்பின்கள் 120-150 செ.மீ நீளமும் 55 கி.கி எடையும் உடையவை. கண் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கறுப்பு நிற வளையங்களைக் கொண்டு காணப்படும் இவை, இப்போது 60-க்கும் குறைவான எண்ணிக்கையிலே உள்ளன. இவைகளை மீட்டு பராமரிக்கும் நோக்குடன் world wildlife fund அமைப்பு களம் இறங்கியுள்ளது. ஏற்கனவே, ராணுவ டால்பின்களின் உதவியுடன் கடலுக்கடியில் இருக்கும் சுரங்கங்கள் மற்றும் பிற உயிரினங்களை கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close