12,000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் வாழ்ந்த மக்கள் எங்கே..?

  jerome   | Last Modified : 06 Jan, 2017 08:40 pm
உலகில் உள்ள முக்கியமான சில பீடபூமிகளில் (Plateau) திபெத்திய பீடபூமியும் ஒன்று. இமயமலைத் தொடர் அமைந்துள்ள இதில் 12,000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சுசாங் எனும் மலை கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 19 பேரின் கை மற்றும் கால் சுவடுகளை "ரேடியோ கார்பன்" முறைக்கு உட்படுத்தியதில் அவற்றின் வயது கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த ஆதிமனிதக் கூட்டம் இந்த பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், இந்த நிலப்பரப்பு அதிக ஈரப்பதமாக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close