மொபைல் போன் மூலம் நோய் பரவும் .... உஷார்!

  நந்தினி   | Last Modified : 06 Jan, 2017 06:39 pm
மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள், நோயாளிகள் இருக்கும் அறைகளிலும், ஐசியு பகுதியிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது, என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மொபைல் போன்கள் பாக்டீரியா, வைரஸ்களை பரப்புவதற்கான பெரிய காரணியாக உள்ளதாம். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில், டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் மொபைல் கீப்பேடில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பாக்டீரியா வகைகளை கண்டுபிடித்துள்ளனர். இவைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்து மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதோடு மொபைலில் உள்ள கிருமிகள், நோய் கிருமிகளுடன் இணைந்து அவற்றை அதிகரிக்கச் செய்கின்றன என்றும் அறியப்பட்டுள்ளது. எனவே டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் சிகிச்சைக்கு பின் நன்றாக கைகளை சுத்தம் செய்வது அவசியம். மேலும், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் நபர்களும் போனை பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது, என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close