கடிகார நேரத்தை கண்டுபிடித்தவருக்கு இன்று 160 வயது: கூகுள் மரியாதை

  gobinath   | Last Modified : 07 Jan, 2017 03:42 pm
ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களுக்கென்று பிரத்யேகமான கடிகார அமைப்பை பயன்படுத்தி வந்தனர். இதனிடையே, கடிகாரத்தில் 24 மணி நேரத்தை ஏற்படுத்தி, அதை , இரவு, பகல் என வகைப்படுத்தி, உலகில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் இன்றைய பொதுவான கடிகார அமைப்பை உருவாக்கியவர் சான்போர்டு பிளமிங். இவ்வாறு உலக மக்கள் பயன்படுத்தும் பொதுவான கடிகாரத்தை உருவாக்கிய சான்போர்டு பிளமிங்கின் 190 ஆவது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் கூகுள் டூடுள் வைத்து அவரை கவுரப்படுத்தியுள்ளது. 1827 ஜனவரி 7 ல் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்த சான்போர்டு பிளமிங், ஆரம்ப நாட்களில் பசிபிக் ரயில்வே தலைமை பொறியாளராக பணியாற்றியிருந்தார். இன்று நாம் பயன்படுத்தும் கடிகாரத்தை கண்டுபிடித்த அவருக்கு, 1897ல் விக்டோரியா மகாராணி, ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close