செத்துப்போனவங்க உயிரோட வந்தா எப்புடி இருக்கும்..?

  jerome   | Last Modified : 07 Jan, 2017 04:48 pm
இந்த இயற்கையில எத மாத்தணுமோ இல்லையோ மரணத்தை மாத்தியே ஆகணும். நமக்கு புடிச்சவங்க நம்ம கூடவே இருக்கும்போது திடீர்னு மிஸ்டர்.எமனார் வந்து லவுட்டிட்டு போயிடுறாரு. அவர தடுத்து நிறுத்த பவர் ஸ்டாரால கூட முடியலையே என வருத்தப்படும் நமக்காக வெள்ளக்கார டாக்டர்லாம் சேர்ந்து ஒரு விஷயத்த கண்டுபுடுச்சு இருக்காங்க...அதுக்கு பேருதான் "க்ரையானிக்ஸ்" (Cryonics). அப்டினா என்ன..? ஒருத்தரு இறந்த அப்புறம் அவரோட உடம்ப -196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில பத்திரமா உறைய வச்சுருவாங்க. இப்ப இருக்க அறிவியல் வளர்ச்சியால இதுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாட்டியும் கூட...ஒருவேளை, இனிமே வரப்போற காலத்துல நம்ம மருத்துவம் விஸ்வரூபம் எடுக்கும்போது இவங்கள உயிரோட கொண்டு வர முடியும்னு ஒரு நம்பிக்கை தான். இதுவரைக்கும் 250 பேரோட பாடி (மன்னிக்கணும்) உடல், இந்த டெக்னிக் மூலம் பத்திரமா இருக்கு. இன்னும் 1500 பேர் இத செய்றதுக்கு வெயிட்டிங்ல இருக்காங்க..முடிஞ்சா நீங்களும் பண்ணிக்கோங்க...ஒருவேள எமலோகத்துல இருந்து நீங்க எஸ்கேப் ஆயிட்டா, இங்க வந்து "நான் செத்து பொழச்சவன்டா..எமன பார்த்து சிரிச்சவன்டா" னு தெலுங்கு பட வில்லன் தோரணையில பாட்டு பாடலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close