• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

இனிமே, யாருக்கும் உடம்புல தழும்பே இருக்காது..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

"தீயினால் சுட்டபுண் உள் ஆறும்". புண்ணு ஆறிடும் பாஸ்.. தழும்பு போகாதே..! உடம்புல தழும்பு இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. சில தழும்புகள் நம்ம சின்ன வயசுல பண்ண சேட்டைகள நியாபகப் படுத்தும், அத நினைக்கும் போது மனசுக்கும் சந்தோசமா இருக்கும். ஆனா, சில தழும்புகள் வாழ்க்கையில நாம வாங்குன மொக்கைகள நெனைக்க வச்சு மனச ஊமக்குத்தா குத்தும். நல்லதோ, கெட்டதோ உடம்புல உள்ள தழும்புகளை நீக்க, மருத்துவர்கள் செஞ்ச ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்துருக்கு. பென்சில்வேனியா பல்கலைக்கழக, தோல் ஆராய்ச்சி துறையின் மருத்துவர்கள் கண்டுபிடிச்சுருக்க இந்த முறையை ஒரு எலியை வச்சு டெஸ்ட் பண்ணி பார்த்ததுல, மனுஷங்களுக்கும் இது ஒர்க் அவுட் ஆகும்னு தெரிய வந்துருக்கு. அதாவது, உடம்புல அதிகமா முடி இருக்கவங்களுக்கு தழும்பு ஈஸியா மறஞ்சுடுதாம். ஏன்னா, முடிகளுக்கு இருக்க கூடிய மயிர்க்கால்கள் " adipocytes" ன்ற கொழுப்பு செல்கள உற்பத்தி பண்ணுதாம். இந்த செல் எல்லாம் ஒண்ணு சேர்ந்து தழும்புகள மறைச்சுடுமாம். இன்னும் இதப்பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணணுமாம். அதுவும் முடிஞ்சதுனா எலி இருந்த இடத்துல நாம இருப்போம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close