நிலவின் வயது என்ன தெரியுமா? புதிய டிவிஸ்ட்

  gobinath   | Last Modified : 13 Jan, 2017 02:51 pm
பூமியின் துணைக் கோளான நிலா, நமது சூரிய குடும்பம் தோன்றி 10 முதல் 20 கோடி ஆண்டுகள் கழித்துதான் உருவாகியிருக்கும் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆயினும், அதைத் தவிடு பொடியாக்கும் விதத்தில், சூரிய குடும்பம் தோன்றி 6 கோடி ஆண்டுகளிலேயே நிலா உருவாகியிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு அப்போலோ 14 மூலம் நிலாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 42 கிலோ எடையுடைய பாறைத்துண்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அதனை வைத்து இவ்வளவு காலமும் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், நிலாவின் உண்மை வயது 451 கோடி ஆண்டுகள் என கணித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தின் வயது தோராயமாக 457 கோடி வருடங்களாக கணிக்கப்படுகிறது. இதன் மூலம் நமது சூரிய குடும்பம் மற்றும் பூமி தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களையும் கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close