ஜிமெயிலில் புதிய மால்வேர் - தடுப்பது எப்படி?

  mayuran   | Last Modified : 18 Jan, 2017 07:59 pm
தற்போது மொபைல் முதல் கணனி வரை கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் பயன்பாடு அதிக ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இந்நிலையில் ஜிமெயில் கணக்குகளில் புதிய மால்வேர் புகுந்து உங்கள் தகவல்களை திருடுவதாக Wordpress நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Mark Maunder கண்டுபிடித்துள்ளார். இது உங்கள் ஜிமெயில் கணக்குகளுக்கு சாதாரண மெயில் போல் வருகிறது. அதனுள் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யும் போது, புதிய திரை தோன்றி ஜிமெயில் கணக்கை மீண்டும் Login செய்ய கேட்கும். அவ்வாறு நீங்கள் Login செய்து விட்டால் உங்க கணக்கில் இருக்கும் அனைத்து தரவுகளையும் ஹேக்கர்களால் திருட முடியும். ஆகவே இவ்வாறு நடப்பதை தடுக்க, புதிதாக லிங்க் வரும் பட்சத்தில் அது 'https://' என்ற பாதுகாப்பு அம்சத்துடன் உள்ளதா என அறிந்து ஓபன் செய்தால் இந்த சிரமத்தில் இருந்து தப்பிக்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close