ஜோடி இல்லாமல் குட்டி போட்ட சுறா மீன்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆஸ்திரேலியாவில் உள்ள கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தில் இருக்கும் "லியோனி" என்ற ஜீப்ரா வகை பெண் சுறா மீன், ஆண் துணை இல்லாமல் 3 குட்டிகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தால், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏனென்றால், "லியோனி" கடந்த 2012- லிருந்து வேறு எந்த மீன்களின் துணையின்றி தனியாகவே வளர்ந்துள்ளது. பிறந்த குட்டிகளின் டி.என்.ஏ வை பரிசோதித்து பார்த்ததில் கூட "லியோனி" யின் டி.என்.ஏ மட்டுமே காணப்படுகின்றது. பெரும்பாலும் தாவரங்களில் மட்டுமே நடைபெறக்கூடிய parthenogenesis எனும் உடலுறவு அற்ற இனப்பெருக்க முறை நிகழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close