உங்கள் பெயரை நிலவில் செதுக்க ரூ. 500 போதும்..!

  jerome   | Last Modified : 27 Jan, 2017 12:46 pm
பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, நிலவில் தன் ஆய்வை மேற்கொள்வதற்கான தொகையை பொது மக்களிடம் இருந்து பெற புது யுத்தியை கையாண்டுள்ளது. அதன்படி, ரூ.500 கொடுத்தால், உங்கள் பெயர் சிறிய அலுமினியத் தகடில் பொறிக்கப்பட்டு, அந்நிறுவனம் அனுப்பும் ரோபோவின் மூலம், நிலவின் மேற்பரப்பில் வைக்கப்பட்டுவிடும். பின் வரும் காலங்களில், நிலவிற்கு சுற்றுலா செல்லும் நம் சந்ததியினர் அதைப் பார்த்து பெருமைப் பட வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 2018- ஆம் ஆண்டு ஜனவரி 26- ல் இந்தியாவின் 71- வது குடியரசு தினத்தன்று, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், நிலவிற்கு விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா தயாராகி வருகின்றது. அதனுடன் இணைந்து மேற்படி நிறுவனம், தான் உருவாக்கிவரும் ரோபோ ஒன்றையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதுவரை, 10 ஆயிரம் பேர் இதற்கான தொகையை கொடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close