பிப்-16 ல் உலகின் பல இடங்களில் சுனாமி - ரஷ்ய விஞ்ஞானி தகவல்

  jerome   | Last Modified : 27 Jan, 2017 04:39 pm

பூமியின் அருகே விண்கல் ஒன்று நெருங்குவதாக, கடந்த நவம்பர் மாத இறுதியில் நாசா விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது. வரும் பிப்ரவரி 25- ஆம் தேதியன்று பூமியிலிருந்து 51 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் அது கடந்து சென்று விடும் என்றும், இதனால், பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லையென்றும் தெரிவித்து இருந்தனர். ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த வானியலாளர் ஜாக்ரோவிச் கூறுகையில் "WF 9 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பிப்ரவரி 16- ஆம் தேதியே பூமியில் விழுந்து விடும். இதனால், சுனாமி போன்ற பேரழிவுகள் உலகின் பல இடங்களில் ஏற்படும்" என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால், அவ்வாறு நிகழ வாய்ப்பு இல்லை என உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.