நிலவில் பீர் ஃபேக்டரி....? - அடேய், அதையாச்சும் விட்டு வைங்கடா..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பெங்களூரில் செயல்பட்டு வரும் 'TEAM INDUS - LAB TO MOON' என்ற இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம், சர்வதேச அளவில் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. அந்த போட்டியில், நிலவில் நிகழும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அங்கு எந்த மாதிரியான தொழிற்சாலைகள் அமைக்கலாம் என கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. இதற்கு, உலகெங்கிலும் இருந்து 3000 பதில்கள் வந்துள்ளன. அதில், கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள், நிலவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசையில் நொதித்தல் வேதி நிகழ்வு எப்படி நடக்கும் என்பதை அறிய பீர் தயாரிக்கும் கருவியை அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இதுபோக, தாவர ஒளிச்சேர்க்கை, கதிரியக்கத்திலிருந்து மின்சாரம் தயாரித்தல், நீர் மறு சுழற்சி போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஐடியாக்கள் வந்துள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close