ஷிஃப்ட் முறையில் பணிபுரிந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், ஷிஃப்ட் முறையில் இரவு, பகல் பாராமல் பணிபுரிவதால், அடிக்கடி நாம் உண்பது, உறங்குவது போன்றவற்றில் காலநேரம் மாறுபடுகின்றது. இதனால், நம் உடலின் இயக்க சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவதால், நோய் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. அதிலும், குறிப்பாக, நோய்க்கிருமிகள் உடலை சீர்குலைப்பதும் அளவுக்கு அதிகமாக உள்ளது. வைரஸ் தொற்று, மாரடைப்பு, ரத்த அழுத்தம், சளித்தொற்று, மூலநோய் போன்றவை ஷிஃப்ட் முறையில் பணிபுரிவோருக்கு வெகு எளிதில் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close