பறவைகளைப் பேச விடாமல் செய்யும் வாகனப் போக்குவரத்து

  jerome   | Last Modified : 02 Feb, 2017 01:25 pm

நகர்ப் புறங்களில் தினம், தினம் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே இருக்க, இன்னொரு பக்கம் சப்தங்களும், இரைச்சல்களும் கூடிக்கொண்டே போகின்றன. இந்தத் தொல்லையால் மனிதர்களுடன் சேர்ந்து பறவைகளும் பாதிக்கப் படுகின்றன என அமெரிக்க பறவைகள் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பறவைகள் ஒன்றுக்கொன்று தகவல்களை பரிமாறிக்கொள்ளும் சப்தங்கள் சரியாக கேட்கப்படாததால் அவைகள் பெரும் ஆபத்துக்கும் உள்ளாகின்றனவாம். ஒரு பறவை எழுப்பும் அபாயத்திற்கான சமிக்கை ஒலிகளை இன்னொரு பறவையால் கேட்க முடியாமல் போவதால், அவை எதிரிகளால் எளிதில் வேட்டையாடப் பட்டுவிடுகிறதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close