விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தோல்வி

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விண்ணில் பழுதடையும் செயற்கை கோள்களின் பொருட்கள், வெடித்துச் சிதறும் பொருட்கள் என கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ள தேவையற்ற குப்பைகள் விண்வெளியில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை நீக்க கோனோடோரி எனப்படும் சரக்கு விண்கலம் ஒன்றை சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஜப்பான் அனுப்பியுள்ளது. இதற்காக, 10 ஆண்டு கால ஆராய்ச்சியில், ஜப்பானின் மீன்பிடி வலை நிறுவனம், நவீன உலோக வலையை தயாரித்து கொடுத்துள்ளது. 700 அடி அகலத்துக்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த வலை, மிக மெல்லியதும் அதே நேரத்தில் மிக சக்திவாய்ந்ததும் ஆகும். இதுதான் விண்வெளியில் சுற்றி வரும் எலக்ட்ரானிக் குப்பைகளை பிடித்து, பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு கீழே இறக்கிவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது அந்த கோனோடோரி சரியாக இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குப்பைகளை அகற்றும் பணியில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close