மயில் இறகிலிருந்து உருவாகும் புதிய தொழில்நுட்பம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஃபேஷன் டெக்னாலஜி துறைக்கு, சாயமேற்றும் தொழில் நுட்பம் (dye) மிகவும் முக்கியமானதாகும். துணிகளுக்கு விரும்பிய நிறத்தில் சாயமேற்றுவதற்காக மூலப்பொருட்கள் அதிகம் தேவை. அதோடு மட்டுமின்றி அந்த நுட்பத்திற்கான தண்ணீர் தேவையும் அதிகம். இதற்கான செலவுகளை குறைக்க மயில் இறகு, வண்ணத்துப் பூச்சி ஆகியவற்றில் காணப்படும் வண்ணக்கலவைகளின் நுட்பத்தை அறிந்து, அதன்படி துணிகளுக்கு புதிய முறையில் வண்ணங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். transferring 3-D colloidal crystals - என்ற முறையின் மூலம், நேர்த்தியான நிறப்பிரிகையை துணிகளில் கொண்டுவர முடியுமென்றும், புதுவிதமான நிறங்களை உருவாக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த முறையால் சாயக்கழிவுகளில் காணப்படும் விஷத்தன்மையும் குறைக்கப் படுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close