மூட்டைப்பூச்சியை விரட்ட உதவும் புது ஐடியா...!

  jerome   | Last Modified : 06 Feb, 2017 11:24 am
நம்மள சுத்தி கண்ணுக்குத் தெரியாத பல உயிரினங்கள் வாழ்ந்துட்டு தான் இருக்கு. ஆனால், நம்மள அதுங்க அட்டாக் பண்ற வரைக்கும் நமக்குத் தெரியறது இல்ல. இதுல முதல் இடத்துல கொசுவும், இரண்டாவது இடத்துல மூட்டைப் பூச்சியும், மூணாவது இடத்துல எறும்பும் இருக்கு. கொசு, எறும்பு இந்த இரண்டையும் "பட்டுனு அடிச்சா..பொட்டுன்னு போயிடும்", ஆனா, மூட்டைப்பூச்சி இருக்கே..அத கொல்றது அவ்ளோ ஈசி இல்லை. வடிவேல் சொல்ற மாதிரி மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன மெஷின்லாம் வச்சு ட்ரை பண்ணாலும், அதுங்க அழகா எஸ்கேப் ஆயிட்டு, நம்மள பார்த்து கூலா "ஹாய் - பை" சொல்லிட்டு போகும். அந்த அளவுக்கு விவகாரமான "காட்டுப்பூச்சி வகையறா" அது. இதுங்கள கொல்றத விட, பெட் ரூமுக்குள்ள வர விடாம பண்றதுக்கு, ஃபுளோரிடா பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் புது டெக்னிக் ஒண்ணு சொல்றாங்க. மூட்டைப்பூச்சிகளுக்கு சிவப்பும், கறுப்பும் தான் ரொம்ப புடிச்ச கலராம். வெள்ளையும், மஞ்சளும் பிடிக்காத கலராம். அதனால பெட் ஷீட், போர்வை, தலையணை உறைக்கெல்லாம் மஞ்சளும், வெள்ளையும் யூஸ் பண்ணா, அதுங்கள ஈஸியா விரட்டிடலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close