ஆணாக மாறும் பெண்கள் - ஆப்பிரிக்காவில் வினோதம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைக்கு முதல் 8 வாரங்களில் பாலின வேறுபாட்டிற்கான ஹார்மோன்கள் சுரந்து ஆணா? பெண்ணா? என்பது தீர்மானிக்கப்பட்டு விடும். இப்படியிருக்க, ஆப்பிரிக்காவில் உள்ள டொமினிகன் குடியரசில் உள்ள சாலினாஸ் என்ற கிராமத்தில் 13 வயது வரை பெண்ணாக இருப்பவர்கள், பிறகு ஆணாக மாறிவிடுகின்றனர். இந்த நிகழ்வு அங்கு வாழும் 50 சிறுமிகளில் ஒருவருக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாலுறுப்புகள் கூட மாறி விடுகின்றதாம். பாலினத்தை முடிவு செய்யும் மரபணுக்களில் உண்டாகும் பாதிப்பே இதற்கு காரணம் என்று மரபணு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆணாக மாறிய சிறுமிகள் பலர் "ஆணாக மாறியதில் சந்தோஷமாக இருக்கின்றது" என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனராம். இந்த நிகழ்வினால், அங்குள்ள பல ஆண்களுக்கு பெண்களுடைய பெயரே இருக்கின்றது. இது பற்றி "Countdown to Life: The Extraordinary Making of You" என்ற தலைப்பில் BBC நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.