விமானப் பயணிகளுக்கு கதிர்வீச்சு மேகங்களால் ஆபத்தா..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பிரபஞ்சத்தின் சிறு துகளாக சுற்றிக்கொண்டிருக்கும் நம் பூமிக்கு சூரியப்புயல், காஸ்மிக் கதிர்வீச்சு, ஓசோன் படலம் பாதிப்பு என தொடர் ஆபத்துகள் இருந்து வரும் நிலையில், இப்போது புதிதாக, பூமியைச் சுற்றி இருக்கும் வளிமண்டல அடுக்கில் "கதிர்வீச்சு மேகங்கள்" கண்டறியப் பட்டுள்ளன. இதனால், அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கதிர்வீச்சு ஆபத்து நேர வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2013-2017 வரை சுமார் 264 விமானங்களில் பொருத்தப்பட்ட ரேடியேஷன் சென்சார்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில், மேகங்களின் கதிர்வீச்சு தன்மை பற்றி கண்டறியப்பட்டு உள்ளது. பூமியின் துருவப் பகுதிகளில் விமானம் பயணிக்கும் போது கதிர்வீச்சின் செறிவு அதிகமாக இருக்கின்றதாம். மேலும், இந்த கதிர்வீச்சு காமா கதிர்களின் பண்பினை ஒத்து காணப்படுகின்றதாம். இதனால், விமானப்பயணம் மேற்கொள்ளும் 10 லட்சத்தில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close