காற்று மாசுபாட்டை குறைக்க "Vertical Forest" கட்டிடம் - சீனா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அளவுக்கு அதிகமான வாகனப் போக்குவரத்தால் சீனாவின் பல முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டினால் "ரெட் அலெர்ட்" நிலையில் உள்ளன. இதற்கு தீர்வு காணும் விதமாக, இத்தாலியைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர் கூறிய ஆலோசனையை சீனா பின்பற்ற தொடங்கியுள்ளது. " Vertical Forest" எனும் இந்த திட்டத்தின் கீழ் நான்ஜிங் நகரத்தில், 107 மீ மற்றும் 199 மீ உயரமுடைய இரு கட்டிடங்கள் கட்டப்பட்டு அவற்றின் சுற்று பகுதிகளில் சுமார் 1100 மரங்கள், 2500 செடிகள், புதர்கள் அமைக்கப்படும். இதன் மூலம் அந்நகருக்கு தினமும் தேவைப்படும் 60 கி.கி ஆக்சிஜன் பெற முடியும். இந்த " Vertical Forest" இதற்கு முன் இத்தாலியில் மிலன் நகரிலும், சுவிட்ஸர்லாந்தில் லோஸன்னா நகரிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இதை, மற்ற நகரங்களிலும் வடிவமைக்க சீன அரசு முடிவெடுத்து உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close