ஒரே மரத்தில் 40 வகை பழங்கள் - அமெரிக்க கலை பேராசிரியரின் சாதனை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வருங்காலத்திற்கான உணவுத்தேவையை கருத்தில் கொண்டு, உலகெங்கும் தாவரவியல் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சைராகஸ் பல்கலைக்கழக கலை பேராசிரியர் சாம் வான் அகேன், 40 வகையான பழங்களை ஒரே மரத்தில் காய்க்கச் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த மரத்தில் பீச், ஆப்ரிகாட், பிளம்ஸ், செர்ரி மற்றும் நெக்ட்ரைன் போன்ற பழங்கள் வெவ்வேறு கிளைகளில் காய்த்து குலுங்குகின்றன. இந்த வகை மரங்களை நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் கென்டகி ஆகிய நகரங்களில் பயிரிடவும் சாம் திட்டமிட்டு உள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close