ஈராக்கில் கண்டறியப்பட்ட 2400 ஆண்டுகால பாரசீகர்களின் கல்லறை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் வடக்கு ஈராக்கில், அகாமனிசியப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கல்லறையை கண்டறிந்து உள்ளனர். அகாமனிசியப் பேரரசு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களில் தன் ராஜ்ஜியத்தை நிறுவிய பாரசீகப் பேரரசு ஆகும். கி.மு 550 - 330 காலகட்டத்தில் இருந்த இப்பேரரசு மாவீரன் அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப் பட்டது. இப்போது கண்டறிந்து உள்ள இந்த 2400 ஆண்டு கால பழைமை வாய்ந்த கல்லறையால், அகாமனிசியப் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை பற்றி புதிய தகவல்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close