16 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப் பட்ட கருமுட்டை மூலம் பிறந்த குழந்தை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீனாவை சேர்ந்த 46 வயது பெண் மணி ஒருவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைக்கப் பட்ட தனது கரு முட்டையின் மூலம் தற்போது அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 2000-ம் ஆண்டு சீனாவில் உள்ள சன் எட் சென் பல்கலைக்கழக மருத்துவமனையில் 30 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் செயற்கை கரு தரித்தல் முறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அப்போது சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப் பட்டிருந்ததால் அப்பெண் தனது மற்ற 18 கருமுட்டைகளை அம்மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்க கொடுத்திருந்தார். தற்போது ஒரு குழந்தை தடை நீக்கப் பட்டு விட்டதால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய அவர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தன்னுடைய பழைய கருமுட்டைகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அந்த மருத்துவமனையை அணுகி உள்ளார். இதையடுத்து உறையவைத்து பாதுகாக்கப் பட்டிருந்த கருமுட்டைகளை செயற்கை முறையில் கருத்தரிக்க வைத்து அப்பெண்ணின் கர்ப்பப்பையில் மருத்துவர்கள் வைத்துள்ளனர். இதை தொடர்ந்து இம்மாத ஆரம்பத்தில் அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். நீண்ட நாட்களாக கரு முட்டை உறைய வைக்கப் பட்டிருந்ததாலும், அப்பெண் வயது முதிர்ந்து காணப் பட்டதாலும் முதலில் கருவை அப்பெண்ணுள் செலுத்துவதில் சிறிது சிக்கல் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close