வன்முறையால் இரண்டு முறை சீர் குலைந்த மாயன் நாகரீகம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகிலேயே தொன்மையான சில நாகரீகங்களில் மாயன் நாகரீகமும் ஒன்று. 2012 - ல் உலகம் அழிந்து விடும் என்றெழுந்த சர்ச்சைக்கு வித்திட்ட இந்த மாயன் நாகரீகம், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால், இரண்டு முறை சீர்குலைந்து மீண்டும் புத்துயிர் பெற்றதாக தொல்லியல் துறையினர் கண்டறிந்து உள்ளனர். மாயன் நாகரீகத்தில் முக்கிய இடங்களாக கருதப்பட்ட ஷெய்பல் மற்றும் குவாத்தமாலாவில் கி.மு 150–300 மற்றும் கி.பி 800–950 ஆகிய காலகட்டங்களில் நடந்த கொடூரமான வன்முறை சம்பவங்களால் அந்நாகரீகம் சிதைக்கப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட 154 கரி மாதிரிகளை ரேடியோ கார்பன் முறைக்கு உட்படுத்தி, அதை துல்லியமாக காலவரிசைப் படுத்தியதில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close