அழிந்து கொண்டிருக்கும் மங்கோலியாவின் அரிய வகை மான் இனம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சைகா ஆண்ட்டிலோப் எனும் மான் வகை மங்கோலியாவில் மட்டுமே காணப்படுகின்றது. குமிழ் வடிவ மூக்கினை உடைய இந்த மான் இனம் தற்போது PPR (Peste des Petits Ruminants) எனும் உயிர் கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாக World Conservation Society (WCS) தகவல் தெரிவித்து உள்ளது. மேற்கு மங்கோலியாவின் ஏரிப் பகுதிகளில் சுமார் 10,000 சைகா இன மான்கள் இருந்தன. அவற்றில் 2500 மான்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளன. 25% அளவிற்கு மான்கள் இறந்து விட்டதால் வன உயிர் ஆர்வலர்கள், அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மான்களை உடனடியாக எரித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close