புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள மூன்று யுரேனியம் கனிமங்கள்

  jerome   | Last Modified : 09 Feb, 2017 02:51 pm
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள "உட்டா" யுரேனியச் சுரங்கத்தில் மூன்று புதிய யுரேனியம் சார்ந்த கனிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழக, கனிமவியல் துறை மாணவர்களால் இது கண்டறிய பட்டுள்ளது. "லீசைட்", "லியோசிலர்டைட்", "ரெட் கேன்யோனைட்" என இம்மூன்று புது கனிமங்களுக்கும் பெயர் வைக்கப் பட்டுள்ளது. இதில் "லியோசிலர்டைட்" கனிமத்தின் பெயர் ஹங்கேரியன் இயற்பியல் ஆராய்ச்சியாளர் "லியோ ஷிலார்ட்" நினைவாக வைக்கப்பட்டுள்ளது. அணுக்கரு பிளவு பற்றியும், அதன் பயன் பற்றியும் 1933 - லேயே அவர் தெரிவித்து இருந்தார். அது மட்டுமின்றி அணுக்கரு பிளவிற்கு யுரேனியம் தான் சிறந்தது என பரிந்துரைத்ததும் அவர் தான். இம்மூன்று கனிமங்களின் கண்டுபிடிப்பால் அணு ஆராய்ச்சித் துறையில் புதிதான மாற்றங்கள் நிகழுமென எதிர்பார்க்கப் படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close