ஏலியன்கள் மனிதர்களை கடத்துகிறார்களா...?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வானியல் ஆராய்ச்சியில் நாம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோமோ, அதை விட பல மடங்கு புதிர்கள் இந்த பிரபஞ்சத்தைப் பற்றி எழுந்து கொண்டே தான் இருக்கின்றன. இன்றளவும் புரியாத புதிராய் நமக்கு இருப்பது "ஏலியன்கள்" பற்றி தான். பறக்கும் தட்டுகள், ஆள் கடத்தல் என அவ்வப்போது எழும் சர்ச்சைகளால் ஏலியன்கள் பற்றிய விவாதங்கள் உலகெங்கும் நடக்கின்றன. 1940 - களில் தொடங்கிய "ஏலியன்கள் மனிதர்களை கடத்தி செல்கின்றனரா..?" என்ற சந்தேகத்திற்கு, அமெரிக்க நரம்பு மற்றும் உளவியல் மருத்துவர்கள் தீர்வைச் சொல்லியுள்ளனர். ஏலியன்களால் கடத்தப் பட்டதாய் சொல்லப்படும் நபர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தொட்டதை அடுத்து, இதற்கான காரணம் கூறப்பட்டு உள்ளது. மருத்துவர்கள் கூறுவது படி, நாம் உறங்கும் போது சில சமயங்களில் நம் நெற்றி பொட்டின் மென்னுணர்வு திறன் அதிகரிப்பதாகவும் அதே சமயம், நம் உடல் அசைவானது இயங்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுமாம். இதனால், நம் நினைவுத்திறன் சில நேரங்களுக்கு மறக்கடிக்கப் படுவதால், பலர் ஏலியன்களால் கடத்தப்பட்டதாக தவறாக உணர்கின்றனராம். ஏலியன்களால் மனிதர்கள் கடத்தபடவில்லை என்றும் உறுதியாக கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close