• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பாதிப்பு ஆசியாவையும் தொடருமா...?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

Army Worms - என்று அழைக்கப்படக் கூடிய பயிர்களை துளையிடும் புழுக்கள், ஆப்பிரிக்க கண்டம் முழுவதிலும் உள்ள விளைநிலங்களில் பெரும் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. ஜாம்பியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மலாவே போன்ற நாடுகள் இதனால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளன. இது குறித்து Centre for Agriculture and Biosciences International (Cabi) - ன் தலைமை ஆராய்ச்சியாளர் மாத்யூ "அமெரிக்காவில் இருந்து வந்திருக்க கூடிய இந்த பூச்சிகள், இறக்கைகள் வளர்ந்தவுடன் அதிக வேகமாக பறக்கக்கூடியவை. புழுவாக இருக்கும் வரை பயிர்களில் துளையிட்டு தனக்கான உணவைத் தேடிக்கொள்பவை. இவற்றை ஆரம்ப கட்டத்திலேயே அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இல்லையென்றால், இவை ஆசிய நாடுகளுக்கும் பரவ வாய்ப்பிருக்கின்றது" என்று கூறியுள்ளார். இந்த பூச்சிகள் சோளம், சோயா பீன்ஸ், அரிசி என முக்கிய உணவுப் பொருட்களில் பாதிப்பை உண்டாக்கி உள்ளதால் ஆப்பிரிக்க நாடுகளின் தானிய ஏற்றுமதி பாதிக்கப் பட்டு உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close