திமிங்கலத்தையே காவு வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சில தினங்களுக்கு முன் நார்வே நாட்டின் கடற்கரைப் பகுதியில் 22 அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. அதை, அந்நாட்டு கடல் சார் உயிரின ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் தோல்வி அடைந்தனர். இதையடுத்து, உயிரிழந்த அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்ததில், அதன் வயிற்று பகுதியில் இருந்து 30 பிளாஸ்டிக் பேக்குகள் எடுக்கப் பட்டன. இந்த வகைத் திமிங்கலங்கள் கடலின் ஆழமானப் பகுதியில் வாழக்கூடியவை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உலகெங்கும் உள்ள கடற்பரப்புகளில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதாகவும், இதனால் கடல் உயிரினங்கள் அழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close