5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீர் ரெசிபி

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சீனாவின் மத்திய பகுதியில் தொல்லியல் துறையினர் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு காலத்தில் பயன்படுத்தப் பட்ட பீர் மதுபானத்தின் மூலப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் அதனுடன் சேர்த்து அந்த காலத்தில் பீர் தயாரிக்க உதவிய பொருட்களும் எடுக்கப்பட்டு உள்ளன. கி.மு 3400 - 2900 காலகட்டத்தைச் சேர்ந்த இந்த பீருக்காக தினை, பார்லி இதனுடன் சேர்த்து பீரின் சுவையை கூட்டுவதற்காக கிழங்குகளும், சீன முத்து எனப்படும் பிரத்யேக பார்லியும் சேர்க்கப்பட்டதாக தெரிகின்றது. அக்கால சீனர்கள் பூமிக்கு அடியில் உள்ள வெப்பநிலையை பயன்படுத்தி நொதிக்கும் திறனை அதிகப்படுத்தி உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close