மனித மூளையை உணவாக சாப்பிட்ட நம் முன்னோர்கள்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
CANNIBALISM - நரமாமிசம் உண்ணுதல் என்ற பழக்கவழக்கம், நம் ஆதி பெற்றோர்களான "நியாண்டர்தால்" மனிதர்களிடையே இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் யுரேசியா ( Eurasia = Europe + Asia ) பகுதியில், தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய இந்த மனிதர்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இது பற்றி Cannibalism: A Perfectly Natural History என்ற தன்னுடைய புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர் பில் ஸ்கட் தெளிவான ஆதாரங்களோடு எழுதியுள்ளார். மேலும், "நியாண்டர்தால்" மக்களிடையே நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததாகவும், ஆய்வுகளின் போது, மூளைப் பகுதிகள் மட்டும் பிளக்கபட்ட மண்டையோடுகள் கண்டெடுக்கப்ப பட்டதாகவும் தெரிவிக்கின்றார். இதே மாதிரியான, ஓடுகள் பிரான்ஸ், பப்புவா நியூ கினியா பகுதிகளிலும் இருந்ததாக கூறுகின்றார். அன்றைய சூழலில் நிலவிய உணவுத்தேவைக்காக இது நிகழ்ந்திருக்கலாம் என மற்ற வரலாற்று ஆய்வாளர்களும் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close