புவி காந்தப்புல சந்தேகங்களை தீர்க்குமா கி.மு காலத்து மண்பானை..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்றைய பெத்லகேம் மற்றும் இஸ்ரேலை உள்ளடக்கி இருந்த ஒரு பேரரசு தான் ஜுடா பேரரசு (the Kingdom Judah). கி.மு 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்தப் பேரரசு பெரும் வல்லமை உடையதாய் விளங்கியது. இந்த காலத்தில் பயன்படுத்தப் பட்ட மட்பாண்டங்களைத் தான் இஸ்ரேல் தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். ஜுடா பேரரசின் அரச முத்திரை பதிக்கப்பட்ட இந்த 67 மட்பாண்டங்களிலும், புவி காந்தப்புலத்தினை குறிப்பிடும் விதமாக அடையாளங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இதனை, archaeomagnetism தொழில்நுட்ப முறைக்கு உட்படுத்துவதன் மூலம் புவி காந்தப் புல அடர்த்தியில் ஏற்படும் மாற்றத்தினை கண்டறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இதுவரை, உலகெங்கும் எடுக்கப்பட்ட தொல்பொருட்களை ஆராய்ந்ததில் புவிகாந்தப் புலத்தின் அடர்த்தியானது மாறிக்கொண்டே வருவது நிரூபிக்கப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close