வாங்க... எல்லாரும் ஏலியன்கிட்ட பேசலாம்...!!!

  jerome   | Last Modified : 16 Feb, 2017 03:56 pm
பேய் இருக்கா..? இல்லையா..?, கடவுள் இருக்கிறாரா..? இல்லையா..? இந்த கேள்விக்கே இன்னும் விடை கண்டுபிடிக்க முடியல.. இருந்தாலும் நம்பிக்கிட்டுத்தான் இருக்கோம். அதே மாதிரி தான், இந்த ஏலியன் விஷயத்துலயும் நடந்துட்டு இருக்கு. திடீர்.. திடீர்னு.. பறக்கும் தட்டுல வர்றாங்களாம், மனுஷங்கள கடத்திட்டு போறாங்களாம், பூமியில இருந்து ரொம்ப தூரத்துல, எங்கேயோ ஒளிஞ்சுக்கிட்டு சிக்னல் கொடுக்கிறாங்களாம். இப்படி, அளவே இல்லாம அக்கப்போரு பண்ற இவங்கள புடிக்க, புதுசா ஒரு டெக்னாலஜியை அப்ளை பண்ணலாம்னு விஞ்ஞானிகள் முடிவு பண்ணிருக்காங்க. அதுக்கு பிள்ளையார் சுழியா, அவங்க ஒளிஞ்சுக்கிட்டு கொடுக்கிற சிக்னலை கண்டுபுடிச்சு, அது எங்க இருந்து வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டா, அந்த "வாம்மா... மின்னல்" கூட்டத்தை புடிச்சரலாம். வானியல் விஞ்ஞானிகள் இதுவரைக்கும் FRB 121102 என்ற ரேடியோ அலை 16 தடவை, பூமிக்கு பக்கத்துல வந்ததை கண்டுபுடிச்சுருக்காங்க. ஆனால், அந்த அலை ரொம்ப, ரொம்ப வேகமா வந்துட்டு போயிடுது. அடுத்து எப்ப வரும்னு கணிக்கவும் முடியல. சுமார், 300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வரும் அந்த ரேடியோ அலையை கேட்ச் பண்றதுக்காக புதுசா ஒரு மொபைல் ஆப் ரெடி பண்ணலாம்னு திட்டம் போட்ருக்காங்க. அந்த ஆப், நம்ம எல்லாருமே பயன்படுத்திக்கலாம். இதற்காக, தனியான டிவைஸ் ஒண்ணும் நம்ம மொபைல்ல அட்டாச் பண்ணிடுவாங்க. FRB 121102 ரேடியோ சிக்னல், நம்மகிட்ட சிக்கும்போது வைஃபை மூலமா விஞ்ஞானிகளுக்கு தகவல் போயிடும். அதுக்கப்புறம் அவங்க, தேடுதல் வேலையை உடனே ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. இது மட்டும் ஒர்க் அவுட் ஆயிடுச்சுனா.. அந்த ஏலியன்கள் பற்றிய சுவாரஷ்யமான விஷயங்களை ஈஸியா தெரிஞ்சுக்கலாம்னு விஞ்ஞானிகள் நம்பிக்கையா இருக்காங்க.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close