அதிக மீன்பிடித் தொழிலால் பாதிக்கப்படும் பென்குயின்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபிய கடல் பகுதிகளில் வாழும் பென்குயின்களின் வாழ்வாதாரம், குறைந்துகொண்டே வருவதால் அவை அழியும் தருவாயில் இருக்கின்றது என International Union for Conservation of Nature அமைப்பு தெரிவித்து உள்ளது. உலகில் அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் பென்குயினும் சேர்க்கப்பட்டு உள்ளது. நமீபிய கடற்பகுதியில் வாழும் 54 பென்குயின்கள் satellite tracker மூலம் கண்காணிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான பென்குயின்கள், வெப்பநிலை குறைந்த பகுதிகளிலும், அதிக குளோரோஃபில் கொண்டிருக்கும் கடல் தாவரங்கள் முளைக்கும் பகுதியில் தான் வாழ்கின்றதாம். அளவுக்கு அதிகமான மீன்பிடித் தொழிலால், கடல் தாவரங்கள் அழிக்கப்படுகின்றது. அதேபோல, பருவநிலை மாற்றம் காரணமாக கடலின் வெப்பநிலையும் உயர்ந்து வருகின்றது. இந்த இரண்டு மாற்றங்கள், பென்குயின் இனத்தை பெரிதும் பாதிக்கும் என கடல்சார் ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close