7000 ஆண்டுகளாக ஒரே ஜீன்களை உடைய மக்கள்

  jerome   | Last Modified : 17 Feb, 2017 12:10 pm
பூமி தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை, படிப்படியாக நடந்து வரும் பரிணாம வளர்ச்சியால், எல்லா உயிர்களிலும் ஜீன்கள் மாறுபாடு ஏற்படுகின்றது. ஆனால், கிழக்கு ரஷ்யாவில் வாழும் உல்ச்சி இன மக்கள் 7700 ஆண்டுகளாக ஒரே ஜீன்களை கொண்டிருப்பது அறிவியலாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த மாதம், கிழக்கு ரஷ்யாவில் நடந்த தொல்லியல் ஆய்வில், 8000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் 5 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப் பட்டது. இதில் 2 பெண் மண்டை ஓடுகள் அடக்கம். அதில், உள்ள டி.என்.ஏ வையும், உல்ச்சி மக்களின் டி.என்.ஏ வையும் ஒப்பிட்டு பார்த்ததில் மிகச் சில வேறுபாடுகளே இருந்துள்ளன. மேலும், இதே மாதிரியான ஜீன்களை உடைய ஆதி மனிதர்கள் ஐரோப்பிய கண்டத்திலும் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி தொல்லியல் துறையினர், "கடந்த நூற்றாண்டு வரைகூட உல்ச்சி மக்கள் மீன்பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற வேலையையே செய்து வந்தனர். இதே தொழில் தான் 8000 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது" என்று கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close