ஆபத்தை உண்டாக்கும் "Always On" கலாச்சாரம்

Last Modified : 20 Feb, 2017 09:52 am
நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலைகளை கவனிக்கும் அளவிற்கு நாம் முன்னேறிவிட்டோம். லேப்டாப், செல்போன் போன்றவற்றின் உதவியால் எங்கிருந்து வேண்டுமானாலும் அலுவலக பணிகளை செய்ய முடியும் என்பதால், எந்த நேரத்தில் அழைத்தாலும் வேலை செய்ய நம்மில் பலர் தயராக இருப்பார்கள். மேலும் அலுவக நேரம் முடிந்த பின்னரும் கூட வீடுகளில் வந்து அப்பணியினை தொடர்வர். "Always On" என அழைக்கப்படும் இந்த பணியிட கலாச்சாரத்தில் சிக்கி கொண்டவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியில், பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலகத்தில் இருப்பதை விட வீட்டிற்கு வந்த பின்னர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டிற்கு வந்த பின்னரும் அலுவலக வேலைகள் குறித்து யோசித்துக் கொண்டிருந்ததே இந்த மன அழுத்தத்திற்கு காரணம், என ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் விரைவில் இருதய நோய் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த "Always On" முறையால் உடல் நலம் மட்டுமல்லாது ஒருவரின் பழக்க வழக்கங்களிலும் மாற்றம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே அலுவலக வேலைகளை வீட்டிற்கு வந்த பின்னர் ஒதுக்கி வைத்து விட்டு குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close