வெடிகுண்டுகளை வேட்டையாடும் "பாம் ஸ்குவாட் தேனீக்கள்"

  jerome   | Last Modified : 20 Feb, 2017 05:34 pm
அமெரிக்காவின் Defense Advanced Research Laboratory (DARPA) ஆராய்ச்சியாளர்கள் 1996-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வந்த ஆராய்ச்சிக்கு நல்ல முடிவு கிடைத்துள்ளது. வெடிகுண்டு தேடுதலில் பெரும்பாலும் நாய்களே பயன்படுத்தப் பட்டு வருகின்றது. நாய்களுக்கு இருக்கும் மோப்ப சக்தி போலவே தேனீக்களுக்கும் மோப்ப சக்தி அதிகம். இதை பயன்படுத்தி வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில், வெடிகுண்டுகளில் உள்ள TNT போன்ற வேதிப்பொருட்களை, சர்க்கரையில் கலந்து தேனீக்களுக்கு வெடி குண்டு வாசனையை மோப்பம் பிடிக்கும் திறன் உண்டாக்கப்பட்டது. இப்படி பயிற்சி அளிக்கப்பட்ட தேனீக்களை, சோதனை செய்ததில், அவைகளும் வெடிகுண்டுகளை கண்டறிந்துள்ளன. இதனால், அடுத்தகட்டமாக, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க, தேனீக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதற்காக Defense Advanced Research Laboratory (DARPA) தனியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடத்தல்காரங்க எல்லாம் தேனீகிட்ட கொட்டு வாங்க ரெடி ஆயிக்கோங்க....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close