மின்னணு சாதனங்களை பாதிக்கும் காஸ்மிக் கதிர்கள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சில சமயங்களில் லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே திடீரென வேலை செய்யாமல் நின்று விடும். பின்பு சில நிமிடங்கள் கழித்து தானாகவே சரியாகிவிடும். மொபைலில் தான் ஏதோ பிரச்சனை உள்ளதாக அனைவரும் நினைப்போம். ஆனால் இதற்கு காரணம் வானில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் தான், என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒளி வேகத்தில் பூமியை நோக்கி வரும் காஸ்மிக் கதிரானது, பூமியின் வளிமண்டலம் மீது மோதி neutrons, muons, pions மற்றும் alpha துகள்களை உருவாக்குகிறது. இதில் மின்னூட்டம் பெற்ற சில துகள்கள் லேப்டாப், செல்போன் போன்ற மின்னனு சாதனங்கள் மீது படும் போது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு எடுத்துக் காட்டாக சில சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேர்தலின் போது காஸ்மிக் துகள்களின் தாக்குதலுக்கு ஆளான மின்னனு வாக்கு பதிவு எந்திரம் வேட்பாளர் ஒருவரின் கணக்கில் 4,096 ஓட்டுக்களை பதிவு செய்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close