கல்யாணமாகி 3 -வது வருஷம் தான் உண்மையான சந்தோஷமே..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" ன்னு எல்லாருமே சொல்வாங்க... ஆனா, கல்யாணம் ஆனவங்க கிட்ட கேட்டு பார்த்தாதான் தெரியும் கஷ்டம். "அந்த சொர்க்கத்தோட அட்ரெஸ் தெரிஞ்சிருந்தா, முன்னாடியே என் ஜோடியை மாத்தி இருப்பேனே" னு புலம்புறவங்க தான் இங்க அதிகம். அப்டீன்னா, கல்யாண வாழ்க்கைல சந்தோஷமே இருக்காதா..? இதுக்கெல்லாம் என்ன காரணம்..? - னு லண்டன் உளவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து பதிலும் கண்டுபுடிச்சுருக்காங்க. கணவன், மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்துகொள்ள திருமணமான முதல் இரண்டு ஆண்டுகள் வரை தேவைப்டுகின்றதாம். இந்த 2 ஆண்டிலேயே, குழந்தையும் இவர்கள் உறவில் இணைந்து விடுவதால், இன்னும் அதிகப்படியான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளதாம். ஆனால், 3- வது வருடம்... கடந்த இரண்டு ஆண்டுகளில், இருவரும் சேர்ந்து பயணித்த வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு, நல்ல புரிதல் ஏற்படுகின்றதாம். இதனால், பெரும்பாலான ஜோடிகள் 3- வது ஆண்டில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கின்றார்கள் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் வேலைச்சுமை, குடும்ப பொறுப்பு, குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் என நிறைய சவால்களை எதிர்கொள்வதால் சந்தோஷம் குறைகின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close